மதிமுக ஆட்சி மலரும் - நாஞ்சில் சம்பத்

மதுரையில் ம.தி.மு.க. 18-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில் நடந்தது.

கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நாஞ்சில் சம்பத் பேசும்போது,

’’மதிமுக இயக்கம் சோதனைகளை கடந்து வளர்ந்த இயக்கம். கடந்த 18 ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை கடந்து கட்சி தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த இயக்கம். ம.தி.மு.க.வை மேலும் வலுவாக்க தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.

வாழ்நாள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின் சிம்மாசனத்தில் ம.தி.மு.க. நிலையான இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும்.
ம.தி.மு.க. பல்வேறு காலக்கட்டங்களில் பிறரின் வெற்றிக்காக பாடுபட்டோம், உழைத்தோம், நம் உழைப்பில் வெற்றியை ருசித்தவர்கள் உண்டு. அது வரலாறு.

இனியும் அதுபோன்ற நிலை ஏற்படாது. ம.தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல புதிய பாதை அமைத்து உழைப்போம். மதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள் விரைவில் மலரும்’’ என்று பேசினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment